உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய நெடுஞ்சாலையில் துர்நாற்றம்; வீசும் குப்பையை அகற்றலாமே

தேசிய நெடுஞ்சாலையில் துர்நாற்றம்; வீசும் குப்பையை அகற்றலாமே

குளித்தலை : குளித்தலை அடுத்த வதியம் பஞ்., திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், மூன்று நாட்களுக்கு முன்பு குறப்பாளையம் பிரிவு சாலையில், கரூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி திரும்பும் போது கவிழ்ந்தது.இதில் லாரியில் இருந்து பழைய கழிவுகள், துர்நாற்றம் வீசும் குப்பை கொட்டியது. விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு சென்ற லாரி உரிமையாளர், துர்நாற்றம் வீசும் குப்பையை அகற்றவில்லை. தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பஸ், பைக்கில் செல்வோர் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். பிரிவு சாலையில் டாரஸ் லாரியில் இருந்து கொட்டப்பட்ட துர்நாற்றம் வீசும் பழைய கழிவு, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ