உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளியில் தீபாவளி இனிப்புகளை பரிமாறி மாணவர்கள் மகிழ்ச்சி

பள்ளியில் தீபாவளி இனிப்புகளை பரிமாறி மாணவர்கள் மகிழ்ச்சி

கரூர், கரூர் கவுண்டபாளையம், அரசு தொடக்கப் பள்ளியில், தீபாவளி இனிப்புகளை பரிமாறி மாணவ, மாணவியர் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகை, 20ல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த, 18 முதல் அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மழை பெய்ததால் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் செயல்பட தொடங்கின.இதில், கரூர் அருகே கவுண்டபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, நேற்று ஒரு நாள் மட்டும் சீருடை இல்லாமல் மாணவ, மாணவியர் தீபாவளிக்கு வாங்கிய ஆடைகளை அணிந்து வர அனுமதிக்கப்பட்டனர். மேலும், தீபாவளி பலகாரமும் கொண்டு வந்தனர். இதனால், மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். வீடுகளில் இருந்து கொண்டு வந்த இனிப்பு, காரங்களை, ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டு மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை