உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி பள்ளி முன் குப்பை கொட்டுவதால் மாணவர்கள் அவதி

கரூர் மாநகராட்சி பள்ளி முன் குப்பை கொட்டுவதால் மாணவர்கள் அவதி

கரூர், கரூரில் மாநகராட்சி பள்ளி முன், வாகனங்களை நிறுத்துவதும், குப்பைகளை கொட்டுவதும் தொடர்கிறது.கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள, மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவு வாயில் அருகில், அந்த பகுதியை சேர்ந்த ஓட்டல், டீ கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வரும் குப்பைகள் கொட்டப்படுகிறது.மேலும், மாநகராட்சி தரப்பில் வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும், பல மணி நேரம் வாகனங்களுடன் பள்ளி முன் நிறுத்தப்படுகிறது. மலைபோல் குப்பைகளுக்கு நடுவில், சில வேன், கார் உள்ளிட்ட வாகனங்களும், பள்ளி நுழைவு வாயிலை மறைத்து நிறுத்தப்படுகிறது. குப்பைகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், சுகாதாரத்தின் அவசியம் குறித்தும் நாடகம், கலை நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.ஆனால், கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி முன், குப்பை மேடு உருவாகி வருகிறது. இதனால், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே குப்பை கொட்டுவோர் மற்றும் வாகனங்களை பள்ளிக்கு முன் நிறுத்துபவர்கள் மீது, மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை