கோடைகால பயிற்சி முகாம் ஏப்.,25 முதல் துவக்கம்
கரூர்:மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வரும், 25 முதல் தொடங்குகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளர்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வரும், 25 முதல் மே 15 வரை நடக்கிறது. தடகளம், கையுந்து பந்து, ஜூடோ, வளைகோல்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி நடக்கிறது. பள்ளி, கல்லுாரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவர்கள் அல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ள சந்தா தொகை ஏதும் இல்லை. இலவசமாக பயிற்சி வழங்கப்படும். கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர்களை நேரடியாவோ அல்லது gmail.com(அல்லது) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகள பயிற்றுனர் சபரிநாதன் 9944200362 (அல்லது) கேலோ இந்தியா ஜூடோ பயிற்றுனர் சண்முகம், 9600895037 ஆகியோரிடம் மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.