கரூரில் இன்று தமிழ் கனவு நிகழ்ச்சி
கரூர், கரூரில், தமிழ் கனவு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், தமிழ் கனவு நிகழ்ச்சி இன்று (20ம் தேதி) நடக்கிறது. இதில், தமிழ்நாட்டின் ஆளுமைகள், பல்துறை நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன. இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.