உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழ்நாடு பஞ்சாயத்து செயலாளர்கள் சங்க கூட்டம்

தமிழ்நாடு பஞ்சாயத்து செயலாளர்கள் சங்க கூட்டம்

குளித்தலை: தோகைமலை ஒன்றியம், குளித்தலை அடுத்த, கீழவெளியூரில் தமிழ்நாடு பஞ்., செயலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.கரூர் மாவட்ட துணை தலைவர் நேசமணி தலைமை வகித்தார். மாவட்ட தகவல் தொடர்பு அமைப்பாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வரதராஜன், நிர்வாகி கலிய ராஜ், ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.தமிழ்நாடு பஞ்., செயலாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் பில்லுார் வெங்கடேசன் பேசியதாவது: தமிழக அரசு பஞ்., செயலாளர்களுக்கு, 3 ஆண்டுக்கு ஒரு முறை பணியிட மாற்றம், வேலைப்பளுவை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். விரைவில் மாநில நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.தொடர்ந்து, தோகைமலை ஒன்றிய தலைவராக தினேஷ், துணைத் தலைவராக மோகன்ராஜ், ஒன்றிய செயலாளராக வரதராஜன், ஒன்றிய பொருளாளராக செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் போதுமணி, மாணிக்கம், ரமேஷ், ரவிச்சந்திரன், முருகானந்தம், மணிவேல் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை