உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 2.98 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு

2.98 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு

நாமக்கல்: ''நாமக்கல் மாவட்டத்தில், 2.98 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் உமா கூறினார்.நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதுார் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா, முகாமை துவக்கி வைத்து கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், 6வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம், இன்று(நேற்று) துவங்கி, 2025 ஜன., 20 வரை, மொத்தம், 36 நாட்கள் நடக்கிறது. மாவட்டத்தில், 2,43,708 பசு மாடுகள், 54,692 எருமை மாடுகள் என மொத்தம், 2,98,400 கால்நடைகளுக்கு, 100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கோமாரி நோய், இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி, காய்ச்சல், கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சு உயிரி தொற்று நோய். கோமாரி நோயால் கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயை தடுக்கும் வகையில், கோமாரி நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாடுகள், எருமைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள், 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை, அவர்களுக்கு அருகே நடக்கும் முகாமிற்கு அழைத்துச்சென்று, கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை