தொழில் நுட்ப உதவியாளர் பணி: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
கரூர்: கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்துக்கு, ஒரு தொழில்-நுட்ப உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு-கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுக-ளுக்கு, பணி செய்யும் பொருட்டு, ஒப்பந்த அடிப்படையில், ஒரு தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு, தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தொழில்நுட்ப உதவியாளரின் பணிக்காலம், 11 மாதங்கள். விண்ணப்பிக்கும் நபர் இளங்கலை பட்டமும், தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்குனகரத்தால், அங்கீகரிப்பட்ட நிறுவ-னத்தில் இருந்து, கணினி பயன்பாடு மற்றும் தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பங்களை வரும், 18க்குள் கரூர் மாவட்ட வன அலுவ-லகம், கதவு எண், 44, பூங்கா நகர் பிரதான சாலை, தான்தோன்றி-மலை, கரூர், 639005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கரூர் மாவட்டத்தை சேர்ந்த, விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.