உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பட்டப்பகலில் கடையில் கைவரிசை காட்டிய ஆசாமி

பட்டப்பகலில் கடையில் கைவரிசை காட்டிய ஆசாமி

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை சேர்ந்தவர் பூபதி, 40; பஸ் ஸ்டாண்ட் எதிரே எலக்ட்ரிகல் மற்றும் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையில் பெண் ஊழியர் பணியில் ஈடுபட்டி-ருந்தார். அப்போது கடையின் மற்றொரு பகுதியான பெயிண்ட் கடைக்குள், பிச்சை கேட்பது போல் தொப்பி அணிந்த ஆசாமி ஒருவர் வந்தார். கும்பிட்டு பயபக்தியுடன் கடை பணப்பெட்-டியை திறந்து பணத்தை திருடி, கடையிலிருந்து வெளியேறினார். இந்த காட்சி கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இது பரவி வருகிறது. புளியம்பட்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு, கள-வாணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி