மோதி டிரைவர் உயிரிழப்பு
குளித்தலை:அரவக்குறிச்சி அடுத்த, பொத்தாம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 47, சரக்கு வாகன டிரைவர். இவர் கடந்த, 28ல், வாகனத்தில் இருந்த சரக்குகளை திருச்சியில் இறக்கிவிட்டு, பின். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.குளித்தலை மேம்பாலம் அருகே வந்த போது, எதிரே கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு சரக்கு வாகனம் மோதியது. இதில் டிரைவர் குணசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனம் நிற்காமல் சென்று விட்டது.இதுகுறித்து குணசேகரன் மனைவி ராஜேஸ்வரி, 38, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு வானத்தை தேடி வருகின்றனர்.