உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வல்லம் கிராமத்தில் சுகாதார வளாகம் மோசம்

வல்லம் கிராமத்தில் சுகாதார வளாகம் மோசம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம் கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை மக்கள் பயன்படுத்தி வரு-கின்றனர். தற்போது சுகாதார வளாக கதவுகள் சேதமாகி கிடக்கின்-றன. மேலும், தண்ணீர் செல்லும் குழாய்கள் உடைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வளாகம் வெளிப்புறத்தில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சுகாதார வளா-கத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்த சுகாதார வளாகத்தை சரிசெய்ய, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி