மேலும் செய்திகள்
மனைவி மாயம்: கணவர் புகார்
02-Oct-2025
குளித்தலை, அக். 10 குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால், 74. இவரது தங்கை இந்திராணி, 71. இந்திராணி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்நிலையில் கடந்த 6ம் தேதி காலை 6:30 மணியளவில் குளித்தலையில் மருந்து மாத்திரை வாங்கி வருவதாக கூறி சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது தங்கையை காணவில்லை என அண்ணன் கொடுத்த புகார்படி, மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
02-Oct-2025