மேலும் செய்திகள்
மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி
24-Jan-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்குட்பட்ட கணக்கம்பட்டி முதல் மேட்டுப்பட்டி வரை, தார்சாலை அமைக்-கப்பட்டுள்ளது. இந்த சாலையை மக்கள் பிரதானமாக பயன்ப-டுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த மாதம் பெய்த மழையால், இந்த தார்சாலை பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் கீழே தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, இந்த சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
24-Jan-2025