மேலும் செய்திகள்
'அரோகரா' கோஷம் முழங்க சுவாமி திருக்கல்யாண உற்சவம்
1 hour(s) ago
கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று ஆறுமுக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த, 22ல் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காப்பு கட்டுதல், உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி மகா அபிேஷகம், மாலை, 4:30 மணிக்கு சக்திவேல் வழங்குதல் மற்றும் கோவில் வளாகத்தில் நான்கு மாடவீதிகளிலும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. சூரனை முருகன் வதம் செய்யும் காட்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். நேற்று காலை, 10:30 முதல், 11:30 மணி வரை முருகன், வள்ளி தெய்வானை உடனான திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகழூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பவித்திரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், தான்தோன்றிமலை முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் ஆலயங்களிலும், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.* கிருஷ்ணராயபுரத்தில் உள்ள, பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி கடைசி நாளை முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் ஆகிய பொருட்கள் கொண்டு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
1 hour(s) ago