உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் : கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி பெருவிழாவையொட்டி நேற்று மாலை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த, 12ல் கம்பம் நடுதலுடன் வைகாசி பெரு விழா துவங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகாசண்டி யாகம், மறுகாப்பு கட்டுதல், தேரோட்டம், அலகு குத்துதல், மாவிளக்கு, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்தது.நேற்று மாலை, 4:30 மணிக்கு கோவிலில், கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை துவங்கியது. 5:30 மணிக்கு கோவிலில் இருந்து கம்பம் மேளதாளத்துடன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அமராவதி ஆற்றில் விடப்பட்டது. ஊர்வலத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்., எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர் அன்பரசன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.கோவிலில் இருந்து கம்பம் அமராவதி ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லும் வழியில், ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்தன் தலைமையில், 250 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ