கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; மூன்று பேர் கைது
குளித்தலை, குளித்தலை அடுத்த, கே. புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ், 47, விவசாயக் கூலித் தொழிலாளி. அடிதடி வழக்கு சம்பந்தமாக, லாலாபேட்டை போலீசில் நேற்று முன்தினம் கையெழுத்து போட்டு விட்டு, காலை 11:00 மணியளவில் தனக்கு சொந்தமான பைக்கில் தர்மராஜ் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். லாலாபேட்டை-வீரவள்ளி நெடுஞ்சாலையில், வீரக்குமாரன்பட்டி அருகே, முன் பகையை மனதில் வைத்துக் கொண்டு, அதே ஊரை சேர்ந்த ஐந்து பேர் பைக்கை வழி மறித்து நிறுத்தி, அரிவாளால் வெட்டியதில் தலை, கைகளில் பலத்த காயமடைந்தார்.இது குறித்து தர்மராஜ் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வினோத், 30, பாலகுமார், 31, மணிகண்டன், 35, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இருவர் தலைமறைவாக உள்ளனர்.