உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே தங்க நகை பறித்த மூன்று பேர் கைது

கரூர் அருகே தங்க நகை பறித்த மூன்று பேர் கைது

கரூர், கரூர் அருகே காரை தடுத்து நிறுத்தி, தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு பஞ்சமாதேவி-மின்னாம்பள்ளி சாலையில் கடந்த, 20ம் தேதி இரவு காரில், இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, டூவீலரில் பின் தொடர்ந்த மூன்று பேர் காரை வழிமறித்து, இரண்டு பேர் அணிந்திருந்த வைரக்கல்லுடன் உடைய ஒரு பவுன் தங்க செயின், ஒரு பவுன் தங்க செயின் ஆகியவற்றை பறித்து கொண்டு தலைமறைவாகினர்.இதையடுத்து, வெங்கமேடு போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.அப்போது, பஞ்சமாதேவியை சேர்ந்த சூர்யா, 29; வினோத், 25; ஆத்துார் பிரிவை சேர்ந்த மோகன்ராஜ், 25; ஆகியோர் நகைகளை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை