மண் கடத்திய டிராக்டர் ஓனர் கைது
குளித்தலை:குளித்தலை அடுத்த முத்துரங்கம்பட்டி வி.ஏ.ஓ., சேதுபதி, 42; இவருக்கு, நேற்று முன்தினம், மஞ்சமேடு பகுதியில் சட்ட விரோதமாக மண் வெட்டி கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வி.ஏ.ஓ., சேதுபதி கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது, கோவக்குளம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், 33, என்பவர், பதிவு எண் இல்லாத டிப்பர் டிராக்டரில் சட்ட விரோதமாக மண் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து மாயனுார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, மோகன்ராஜை கைது செய்தனர்.