வெண்ணைமலையில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி முகாம்
கரூர், கரூர் வெண்ணைமலையில், கரூர் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் தலைமை வகித்தார். கரூர் சட்டசபை தொகுதி வாக்காளர்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பெயர் சேர்த்தல் குறித்து எளிமையாக செயல்படுத்திட, அரசியல் கட்சி ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு. ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை, வாக்காளர்களிடம் வினியோகம் செய்து, திரும்ப பெற்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.முகாமில், கரூர் தாசில்தார் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.