உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புறவழி சாலையில் சிறு பாலங்கள் கட்டும் பணி; போக்குவரத்து மாற்றம்

புறவழி சாலையில் சிறு பாலங்கள் கட்டும் பணி; போக்குவரத்து மாற்றம்

குளித்தலை: கரூர்-திருச்சி புறவழிச்சாலையில், வதியம் பஞ்., மேல குறைபாளையத்திலிருந்து நகராட்சி சுங்ககேட் வரை, தென்கரை பாசன வாய்க்கால் மூலம் நிலத்திற்கு செல்லும் பாசன கண்ணாறுகள் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆறு சிறு பாலங்களை சீரமைப்பு செய்து புதிய பாலம் கட்டு வதற்கு, ஒரு கோடியே, 6 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, நேற்று காலை குளித்தலை சுங்ககேட்டில் உள்ள புறவழிச்சாலையில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.இதே போல் வதியம் பஞ்., மேல குறைப்பாளையத்தில் பேரிகார்டு தடுப்புகள் வைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆறு சிறு பாலங்கள், இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெறுவதால், திருச்சி மார்க்கத்திலிருந்து கரூர், கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், கனரக வாகனம், லாரிகள் அனைத்தும் குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தோகைமலை மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், சுங்ககேட் வழியாக புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் மேற்பார்வையில், அரசு ஒப்பந்ததாரர் பழனிசாமி முன்னிலையில், சிறு பாலங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியுள்ளது.நெடுஞ்சாலை துறை சார்பில், போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் டிஜிட்டல் பேனர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலை போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி