கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா
கரூர் :வெள்ளியணை தனியார் கலைக் கல்லுாரியில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.தமிழ்நாடு வனத்துறை மற்றும் கரூர் வனக்கோட்டம் சார்பில், பசுமை இயக்க தினத்தையொட்டி, வெள்ளியணை தனியார் கலைக் கல்லுாரியில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.அதில், கல்லுாரி வளாகத்தில் பல்வேறு விதமான மரக்கன்றுகளை, கலெக்டர் தங்கவேல் நட்டு வைத்தார். விழாவில், கிருஷ்ணராயபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, வன அலுவலர் சண்முகம், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, பசுமை தோழர் ஐஸ்வர்யா, வனச்சரகர் அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.