உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்

மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்

அரவக்குறிச்சி, நெடுஞ்சாலையோரத்தில், மரக்கன்றுகள் நடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. அரவக்குறிச்சியில், நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. அரவக்குறிச்சியில் இருந்து தாடிக்கொம்பு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில், கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார், அரவக்குறிச்சி உதவி கோட்ட பொறியாளர் கர்ணன் ஆகியோரின் ஆலோசனைப்படி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் வினோத் குமார் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை