உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் வைத்து சூதாட்டம் இரண்டு பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் இரண்டு பேர் கைது

கரூர் :கரூர் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., ஆர்த்தி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வி.வி.ஜி., நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக வெங்கமேடு ரொட்டிக்கார தெரு மோகன் பாபு, 24; கண்ணதாசன் தெரு மணிகண்டன், 26; ஆகிய இரண்டு பேரை, வெங்கமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை