மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்தஇருவருக்கு காப்பு
18-Apr-2025
கரூர்,:கரூர் மற்றும் தான்தோன்றிமலையில் கஞ்சா வைத்திருந்ததாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கரூர் உழவர் சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கரூர் கடம்பங்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ்வரன், 24; என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.அதேபோல், தான்தோன்றிமலை அருகே வெங்ககல்பட்டியில், 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், 20; என்பவரை போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் கைது செய்தார்.
18-Apr-2025