உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் இருவர் பலி

பைக் மீது சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் இருவர் பலி

குளித்தலை: வரவணை சாலையில், பைக் மீது ஈச்சர் சரக்கு வாகனம் மோதியதில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்த இரு மாணவர்கள் பலியாகினர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த காணியாளம்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம், வீரப்பூரை சேர்ந்த செபாஸ்டியன் சுபாஷ், 19, மணப்பாறை உடையாப்பட்டியை சேர்ந்த ஜான்சன், 19, கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியை சேர்ந்த அருண்ஜெஸ்டின், 19, ஆகிய மூன்று மாணவர்களும் மூன்றாம் ஆண்டு படிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று மாலை, 5:30 மணியளவில் கல்லுாரி முடித்து விட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டி அருண்ஜெஸ்டின் ஹீரோ ேஹாண்டா பைக்கை ஓட்ட, பின்னால் செபாஸ்டியன் சுபாஷ், ஜான்சன் ஆகியோர் அமர்ந்து வரவணை வழியாக தரகம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, வரவணை பகுதியில் எதிரே வந்த ஈச்சர் சரக்கு வாகனம், பைக்குடன் நேருக்கு நேர் மோதியது.விபத்தில் செபாஸ்டியன் சுபாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த இரு மாணவர்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இதில் ஜான்சன் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அருண்ஜெஸ்டின் மேல் சிகிச்கைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஈச்சர் சரக்கு வாகன ஓட்டுனர் ஜெகதாபியை சேர்ந்த சரவணன் மீது, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை