மத்திய சட்ட அமைச்சர் கலந்துரையாடல்
ஈரோடு, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ஈரோட்டுக்கு நேற்று வந்தார். கருங்கல்பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த, வடமாநில மக்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினார்.முன்னதாக மொடக்குறிச்சி அருகே எழுமாத்துாரில், உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தந்தை முத்துசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். நீதிபதி சுந்தரேஷ், அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். ஈரோடு பெரியார்நகரில் உள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி வீட்டுக்கும் சென்று, அவரது மகள் கருணாம்பிகை மறைவுக்கு ஆறுதல் கூறினார்.