சாக்கடை கால்வாயில் கழிவுமுட்புதர்களை அகற்றணும்கரூர் அருகே திருமாநிலையூர் சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில், முட்புதர்கள் அதிகளவில் முளைத்துள்ளது. இதை அகற்றவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பல இடங்களில் தேங்கியுள்ளது. மேலும் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை பெய்யும் போது, மழை நீருடன் கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது.சேலம் - கரூர் பழைய சாலைஅகலப்படுத்த வேண்டுகோள்கரூரில் இருந்து சேலத்துக்கு வெங்கமேடு, வெண்ணைமலை, செம்மடை வழியாக பல ஆண்டுகளாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன. ஆனால், தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு, வெங்கமேடு வழியாக, கரூர் நகருக்கு வாகனங்கள் செல்வது குறைந்து வருகிறது. இதனால், கரூர்- சேலம் பழைய சாலையில், வெங்கமேடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. இதையொட்டி, கரூர்- சேலம் பழைய சாலை வெங்கமேடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும்,வீடுகளில் இருந்து வெளியேறும்கழிவு நீரால் மக்கள் கடும் அவதிகரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அம்மன் நகரில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் போதிய சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்யப்படவில்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் சாலையில் தேங்கி நிற்கிறது. தற்போது, திறந்தவெளி பகுதியில் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசு உற்பத்தி அதிகரித்து, இரவு நேரத்தில் துாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்,