கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்
கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இதற்காக பலர் தங்களது தோட்டத்தில் தீவன பயிர்களான கம்பு, ஒட்டுப்புல், கினியாபுல், கொழுக்கட்டை புல், பயறு வகையில் வேலிமசால், குதிரை-மசால், முயல்மசால், தீவன தட்டைபயிர் போன்றவை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். தீவன பயிர்-களை வளர்க்க நிலம் இல்லாத விவசாயிகள் சிலர் தோட்டங்-களை குத்தகைக்கு எடுத்து கால்நடைகளை பராமரித்து வருகின்-றனர். கால்நடைகளை விற்பனை செய்ய சந்தைகள் இருப்பதை போன்றே கால்நடை தீவனங்களை தயாரிக்கும் விவசாயிகளிடம் தீவனங்களை பெற ஏதுவாக தீவன சந்தை அமைக்க வேண்டும்.