நெடுஞ்சாலை பாலத்தில் பள்ளம் சரி செய்ய ஓட்டுனர்கள் வலியுறுத்தல்
நெடுஞ்சாலை பாலத்தில் பள்ளம்சரி செய்ய ஓட்டுனர்கள் வலியுறுத்தல்குளித்தலை, நவ. 22-குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., வீரவள்ளி கிராமம் வழியாக திருச்சி மாவட்டம், உறையூர் வெக்காளியம்மன் கோவில், குழுமணி, நங்கவரம், பொய்யாமணி, மேட்டுமருதுார், கோட்டமேடு, ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலை, பிள்ளபாளையம், லாலாபேட்டை, சிந்தலாவாடி, மேட்டுமகாதானபுரம், புலியூர், உப்பிடமங்கலம் வரை சாலை செல்கிறது.மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலையை பராமரித்து வருகின்றனர். வீரவள்ளி கிராமத்தில் உள்ள சாலையின் சிமென்ட் பாலத்தில், இரண்டு பகுதியில் பெரிய அளவு பள்ளம் விழுந்துள்ளது. அச்சத்துடன் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். எனவே, நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தை செப்பனிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.