அடிப்படை வசதிகள் கேட்டு வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணராயபுரம்: டவுன் பஞ்சாயத்து மற்றும் யூனியன் பகுதிகளில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிருஷ்-ணராயபுரம் பஸ் ஸ்டாப் அருகில், வி.சி., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்ற வன்னியரசு தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சா-யத்து, 13 வார்டு மறுசுழற்சி அடிப்படையில், தனி வார்டாக மாற்றுதல், கிருஷ்ணராயபுரம் யூனிய-னுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளான சேங்கல், பாலாராஜபுரம், சித்தலவாய் ஆகிய பஞ்சாயத்-துகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செய-லாளர் உதயநிதி, மாவட்ட செயலாளர் சக்திவேல், 13வது வார்டு கிளை செயலாளர் பார்த்திபன், மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், சேங்கல் பூபதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.