கரூர் ரத்தினம் சாலையில் காய்கறி கழிவுகளால் சீர்கேடு
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில், ஆயிரக்கணக்-கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி வழியாக, வாங்கல், நெருர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ரத்தினம் சாலை வழியாக சென்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் காய்கறி கழி-வுகள், ரத்தினம் சாலையோரம் கொட்டுவதால், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. காய்கறி கழிவுகள் மழையோடு சேர்ந்து மக்கி, ஒருவித துர்நாற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், சுகா-தார சீர்கேடும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியினர் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இப்பகு-தியில் காய்கறி கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்-துள்ளனர்.