வெங்கடரமண சுவாமி கோவில் திருப்பவித்ர வேள்வி விழா
கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், திருப்பவித்ர வேள்வி விழா நடந்தது.பிரசித்தி பெற்ற, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த, 13 ல் மாலை வாஸ்து பூஜையுடன், திருப்பவித்ர வேள்வி விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, சேனை முதல்வர் வழிபாடு, முதல் கால வேள்வி விழா நடந்தது.நேற்று காலை, இரண்டாம் கால வேள்வி விழா, கலசங்களுக்கு பூஜை, சிறப்பு சாந்தி வேள்வி விழா நடந்தது. ஏராளமான பக்-தர்கள் சுவாமியை வழிபட்டனர். பிறகு பிரசாதம் வழங்கப்பட்-டது.இன்று காலை, 11:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் மற்றும் கல-சங்கள் திருவீதி உலா, திருப்பாவாடை, திவ்ய பிரபந்தம் சாத்து முறை, திருப்பவித்ர வேள்வி விழா நடக்கிறது.