மேலும் செய்திகள்
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
18-Sep-2025
கரூர், கரூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியாக கரூரில் உள்ள காவிரியுடன் நொய்யல் ஆறு கலக்கிறது. திருப்பூர் சாயக்கழிவு நீரில் உப்பு, அமிலம் தன்மை என்ற டி.டி.எஸ்., அளவு அதிகரித்து கலந்து சென்றதால், சாயக்கழிவு தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை, திருப்பூர் மாவட்டகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. தற்போது, கரூர் அருகில் நொய்யல் என்ற இடத்தில் உள்ள நொய்யல் ஆற்றில், 133 கன அடி அளவில் தண்ணீர் செல்கிறது. இருந்தபோதும் திருப்பூர் சாய ஆலையில் இருந்து வெளியேறும் தண்ணீரை, நல்ல முறையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். ஆனால் அதை யாரும் செய்யாததால் பாசனத்துக்கு பயன்படாமல் மழை நீர் வீணாகி வருகிறது என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
18-Sep-2025