மேலும் செய்திகள்
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
22-Jul-2025
கரூர், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடியாக சரிந்தது. கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 63 ஆயிரத்து, 966 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 20 ஆயிரத்து, 470 கன அடியாக சரிந்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 19 ஆயிரம் கன அடியும், தென்கரை வாய்க்காலில், 650 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 17.25 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
22-Jul-2025