மேலும் செய்திகள்
அரவக்குறிச்சியில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்
16-Apr-2025
அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது
07-Apr-2025
அரவக்குறிச்சி: குடிநீர் குழாய் உடைந்து சுற்றிலும் தண் ணீர் தேங்கியுள்ளதால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக ராட்சத குழாய் பதித்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரவக்குறிச்சி அருகே, பூலாம்வலசு பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக, தினசரி, 1,000 லிட்டருக்கும் மேல் குடிநீர் வீணாகி சாலையில் தேங்கியுள்ளது. தேங்கிய நீர் வடியாததால், டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சிறிய பிளாஸ்டிக் குழாய் பதித்திருந்தபோது, அதில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகியது. இதனால், ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீருக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என, பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
16-Apr-2025
07-Apr-2025