மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
கரூர்: மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று குறைந்தது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 7,779 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 7,152 கன அடியாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக, நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.அமராவதி அணைதிருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 451 கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்-மட்டம், 88.49 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 313 கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றில், 125 கன அடி தண்ணீரும் திறக்-கப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு நேற்று காலை, 602 கன அடி தண்ணீர் வந்தது. ஆத்துப்பாளையம் அணை க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்-மட்டம், 23.61 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 31 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மழை நிலவரம்கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர் நகரில், 2.40 மி.மீ., மழை, மாயனுாரில், 4 மி.மீ., மழை பெய்தது.