மேலும் செய்திகள்
வெளியூர் செல்லும் சாயல்குடி நிலக்கடலை
09-Jan-2025
கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரத்தில், நிலக்கடலை செடிகளுக்கு களைகள் அகற்றும் பணியில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, வாத்திக்கவுண்டனுார், குழந்தைப்பட்டி, வரகூர், சரவணபுரம், திருமேனியூர், சிவாயம், குழந்தைப் பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். உழவு செய்யப்பட்ட விவசாய நிலங்களில், 15 நாட்களுக்கு முன் கடலை பருப்பு நடப்பட்டது. தற்போது நடப்பட்ட, நிலக்கடலை சாகுபடிக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது.தொடர்ந்து நிலக்கடலை செடிகள் பசுமையாக வளர்ந்துள்ளது. இதனால் செடிகள் நடுவில் களைகள் அதிகம் வளர்ந்தால், செடிகள் வளர்ச்சி பாதிக்கும். இதை தடுக்கும் வகையில், விவசாய தொழிலாளர்களை கொண்டு, செடிகள் நடுவில் வளர்ந்த களைகள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதன் மூலம் அதிக மகசூல் பிடிக்கும் என விவசாயிகள் கூறினர்.
09-Jan-2025