உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கைத்தறி தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கைத்தறி தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர், கரூர், வெங்கமேட்டில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ், 10 நெசவாளர்களுக்கு, 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவி, குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2 நெசவாளர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 5 நெசவாளர்களுக்கு, 3.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவி என மொத்தம், 32 நெசவாளர்களுக்கு, 10.84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், உதவி இயக்குனர் (கைத்தறி) பழனிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை