உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நலவாரிய இணையதளம் இயங்கவில்லை பூசாரிகள் பேரமைப்பு கலெக்டரிடம் மனு

நலவாரிய இணையதளம் இயங்கவில்லை பூசாரிகள் பேரமைப்பு கலெக்டரிடம் மனு

கரூர்: பூசாரி நலவாரிய பதிவு செய்யும் இணையதளம் இயங்கவில்லை என, தமிழக பூசாரிகள் பேரமைப்பினர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கோவில்களில், ஏராளமான பூசாரிகள் தெய்வ பணிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, பொருளாதார உதவிகள் இல்லாத காரணத்தால், திருப்பணிகளில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்கள் விளைவாக, சில சலுகைளை அரசு அறிவித்துள்ளது. ஆனால், பூசாரி நலவாரிய பதிவு செய்யும் இணையதளம் இயங்கவில்லை, வருமான சான்று பெற முடியவில்லை என்ற காரணத்தால் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியவில்லை. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை