உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மண்டல தலைவருக்கு அதிகாரம் அளித்தது யார்? அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி

மண்டல தலைவருக்கு அதிகாரம் அளித்தது யார்? அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று, உத்தரவு போடும் அதிகாரத்தை, தி.மு.க., 1வது மண்டல தலைவர் சக்திவேலுக்கு யார் அளித்தது என்று, அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.கரூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், கவுன்சிலர்கள் சாதாரண, அவசர கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:மாநகராட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தான் பிரச்னைகள் குறித்து பேசுவோம். இந்த முறை ஆளும் கவுன்சிலர்கள் கொதித்து போய் பேசும் நிலையில் உள்ளது. மாநகராட்சியில் சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. இதனால், ஆளும் கட்சி கவுன்சிலர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதனால், மேயர் கவிதாவே, மாநகராட்சி நிர்வாகம் செயல்படவில்லை என்று வெளிப்படையாக சொல்லும் அளவிற்கு சென்று விட்டது. மேலும், கூட்டத்தை நடத்தும் அதிகாரம், மேயர் கவிதாவிற்கு உள்ளது. ஆனால், 1வது மண்டல தலைவர் சக்திவேல், உடனடியாக கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். கூட்டத்தில், யாரும் குறைகளை சொல்ல கூடாது. மாநகராட்சி அலுவலகத்தில் மனுவாக வந்து கொடுக்க வேண்டும் என்று அதிகார தோரணையில் பேசுகிறார். இவ்வாறு பேச யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை