மேலும் செய்திகள்
சிவப்பு எள் அறுவடை பணியில் விவசாயிகள்
03-Jul-2026
கிருஷ்ணராயபுரம்; கோவக்குளம் கிராமத்தில், சாகுபடி செய்யப்பட்-டுள்ள சிவப்பு சோளம் அறுவடை பணிகளில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம், பிச்சம்-பட்டி, தாராபுரத்தனுார், தொட்டியப்பட்டி ஆகிய பகுதிகளில், சிவப்பு சோளம் சாகுபடி செய்துள்-ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது விளைச்சல் கண்டுள்ள சிவப்பு சோளம் பயிர்களை, கூலி தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் கால்நடைகளுக்கு தீவனமாக சோளத்-தட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் சோளம் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்த நாட்களில் வரு-மானம் தரக்கூடிய பயிர் என்பதால், விவசாயிகள் சோளம் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்துள்-ளனர்.
03-Jul-2026