உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஆண்கள் பள்ளியில் உலக யானைகள் தின விழா

அரசு ஆண்கள் பள்ளியில் உலக யானைகள் தின விழா

கரூர்:புகழூர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில், உலக யானைகள் தின விழா நேற்று நடந்தது. அதில், யானைகள் தினம் கொண்டா-டுவதன் நோக்கம், யானையின் ஆயுட்காலம், நில அதிர்வுகளை யானைகள் அறிந்து கொள்ளும் விதம், தமிழகத்தில் யானைகள் அதிகம் வளரும் முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் காட்-டுப்பகுதிகளின் வரலாறு குறித்து, தலைமையாசிரியர் விஜயன் விளக்கமளித்து பேசினார். விழாவில், தாவரவியல் ஆசிரியர் ஜெரால்டு, உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி, நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர் சரவணன், ஆசிரியர்கள் மனோகரன், சுப்பிரமணி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை