உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

கரூர்:கரூர் கிளைச்சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடத்திற்கு, வரும், 28க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்தியசிறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூர் கிளைச்சிறையில், காலியாக உள்ள சமையலர் பணியிடத்திற்கு, 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் பணியில், 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, 18 முதல், 34 வயதுக்குட்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவங்களை, திருச்சி மத்திய சிறை, சிறை கண்காணிப்பாளருக்கு, வரும், 28க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ