மேலும் செய்திகள்
. மொபட் மீது வேன் மோதி முதியவர் உயிரிழப்பு
26-Jul-2025
யோகத்தின் 8 படிகள் | Aanmeegam Interview
24-Jul-2025
கரூர், கரூர் அருகே, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.குளித்தலை நச்சலுார் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன், 34; இவர் நேற்று முன்தினம், ேஹாண்டா யூனிகார்ன் பைக்கில், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வீராக்கியம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி எதிரே உள்ள, கிணற்றின் தடுப்பு மீது பைக் மோதியது. அதில், கீழே விழுந்த அரவிந்தனுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. பிறகு, ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அரவிந்தன் உயிரிழந்தார்.இதுகுறித்து, அரவிந்தன் மனைவி ஞானசுந்தரி, 31, கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26-Jul-2025
24-Jul-2025