உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து குழந்தை பலி; பெற்றோர் படுகாயம்

கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து குழந்தை பலி; பெற்றோர் படுகாயம்

ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், ஒன்றரை வயது பெண் குழந்தை பலியானது. குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கா படுகாயமடைந்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மங்கலபட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன், 27, ‍பெங்களூருவில் இரும்பு கடை நடத்தி வந்தார்; இவர் மனைவி சுதா, 24; இவர்களுக்கு, 4 வயதில் மித்ரா மற்றும் ஒன்றரை வயதில் லக்சனா என்ற இரு பெண் குழந்தைகள். உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க, பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு மாருதி ஆல்டோ காரில் மனைவி குழந்தைகளுடன் நேற்று முன்தினம் காலை பெரியண்ணன் வந்தார். ஓசூர் - ராயக்கோட்டை சாலையில், உப்பரதம்மண்டரப்பள்ளி கிராமத்தில் காலை, 8:30 மணிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த பெரியண்ணன், சுதா மற்றும் குழந்தைகள் மித்ரா, லக்சனா ஆகியோரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் குழந்தை லக்சனா உயிரிழந்தாள். ஓசூர் தனியார் மருத்துவமனையில் பெரியண்ணனும், சுதா மற்றும் மித்ரா ஆகியோர், பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். இதில் குழந்தை மித்ராவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை