மேலும் செய்திகள்
பெண்ணை பலாத்காரம் செய்தால் துாக்கில் போட சட்டம்!
11-Jan-2025
கரூர்,: வெள்ளியணை அக்ரஹாரத்தை சேர்ந்த ஆர்.சரவணன் என்பவர், குளித்தலை மின்சார வாரியம் நச்சலுாரில் லைன் இன்ஸ்பெக்டராக இருந்தார். பணியில் ஒழுங்கீனமாக நடந்ததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை ரத்து செய்ய கோரி, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்க, கரூர் மின்வாரியத்தின் முன்னாள் நிர்வாக மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் கணக்கு மேற்பார்வையாளர் என்.சரவணன், 62, ஆகியோர், 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டனர்.இது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது. 2011 டிச., 15ல், கரூரை சேர்ந்த நரசிம்மன் மூலம் பணம் பெற்ற போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நீதிபதி ஜெயபிரகாஷ் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், வழக்கின் போது தட்சிணாமூர்த்தி இறந்து விட்டார். என்.சரவணனுக்கு சட்டப்பிரிவு, 7- ஊழல் தடுப்பு சட்டம், 1988ன்படி, ஓராண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 13 (2) உடன் இணைந்த 13 (1) (d)ன் படி ஓராண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நரசிம்மனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
11-Jan-2025