உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணி

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணி

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணிஓசூர்,:ஓசூர் வனக்கோட்ட வனத்துறை சார்பில், அனுமந்தபுரம் பஞ்., உட்பட்ட சித்தலிங்க கொட்டாய் பகுதியில், யானை மற்றும் பிற வன உயிரினங்கள், விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில், நமக்கு நாமே திட்டத்தில், 5 கி.மீ., துாரத்திற்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், இரும்பு கம்பிவடவேலி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அவரிடம், அப்பகுதி மழைவாழ் மக்கள், குடிநீர் பிரச்னை உள்ளதாக தெரிவித்தனர். சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஏற்கனவே ஜவளகிரி பஞ்., உட்பட்ட சென்னமாளம் முதல் காடுசீவனப்பள்ளி வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, 1.40 கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு கம்பி வடவேலி மற்றும் மூங்கில் வேலி மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அடர் வனத்தில் விலங்குகள் குடிநீர் பயன்பாட்டிற்கு, சின்னையன் ஏரி சீரமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே சானமாவு முதல் பீர்ஜேப்பள்ளி வரை, 18 கி.மீ., துாரத்திற்கு, 90 லட்சம் ரூபாயில் தொங்கும் சோலார் மின்வேலி, தேவர்பெட்டா முதல் கங்கனப்பள்ளி வரை 4 கி.மீ., துாரத்திற்கு, 20 லட்சம் ரூபாயில், சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.ஆய்வின் போது, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன், தாசில்தார் கோகுல் நாத், தொண்டு நிறுவன பிரதிநிதி குமார் சஞ்சீவ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை