உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., மாநில வர்த்தகர் அணி நிர்வாகி முதல்வரிடம் வாழ்த்து

தி.மு.க., மாநில வர்த்தகர் அணி நிர்வாகி முதல்வரிடம் வாழ்த்து

தி.மு.க., மாநில வர்த்தகர் அணி நிர்வாகி முதல்வரிடம் வாழ்த்துகிருஷ்ணகிரி, -தி.மு.க., மாநில வர்த்தகர் அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கே.வி.எஸ்.,சீனிவாசன், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் கே.வி.எஸ்.,சீனிவாசன், 52. தி.மு.க., அடிப்படை உறுப்பினராக இருந்து கொண்டு கட்சி பணிகளும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், தி.மு.க., மாநில வர்த்தகர் அணியின் துணை செயலாளராக கே.வி.எஸ்.,சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினை, சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை