மேலும் செய்திகள்
அன்பழகன் பிறந்த நாள் விழா
20-Dec-2024
மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
03-Dec-2024
ஓசூர், டிச. 22-ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல், ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவில் மாநகர, தி.மு.க., அலுவலகம் திறப்பு விழா, கட்சி கொடியேற்றும் விழா என, முப்பெரும் விழா நேற்று நடந்தது. மாநகர செயலாளர் மேயர் சத்யா தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோர், ஓசூர் மாநகர, தி.மு.க., அலுவலகத்தை திறந்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள், 50 பேருக்கு தலா, 10,000 ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கினர்.முன்னதாக, அமை ச்சர் நேருவிற்கு, மாநகர செயலாளர் மேயர் சத்யா, வெள்ளி செங்கோல் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Dec-2024
03-Dec-2024