மேலும் செய்திகள்
பல்நோக்கு கட்டடம் திறப்பு
13-Feb-2025
காங்., மாஜி எம்.பி.,க்குகிராம மக்கள் நன்றிஊத்தங்கரை, :ஊத்தங்கரையை அடுத்த, சாமல்பட்டி பஞ்., சுப்பிரமணிய நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இவர்களுக்கு கடந்த, 58 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.இந்த பட்டாக்கள், அரசு கிராம கணக்கில் இல்லை. இதனால் அரசு சலுகைகள் ஏதும் பெற முடியாமல் தவித்து வந்தனர். கிராம கணக்கில் ஏற்றி தரக்கோரி பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். கிருஷ்ணகிரி, காங்., முன்னாள் எம்.பி., டாக்டர் செல்லக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி பட்டாவை கிராம கணக்கில் ஏற்றி கொடுத்தார். மக்களின், 58 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய, காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமாருக்கு, சுப்பிரமணிய நகர் மக்கள் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடந்தது.இதில், காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆனந்தன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மணிவண்ணன், மாநில செயலாளர் ஆறுமுகம், தொகுதி பொறுப்பாளர் சசிகுமார், வட்டார தலைவர் தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
13-Feb-2025